எங்கள் ஜோதிட சாப்ட்வேர் உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு துல்லியமான ஜாதகத்தை உருவாக்குகிறது. திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் தசவர்க்கம், அஷ்டக வர்க்கம், ஷட்பலம் மற்றும் விம்சோத்தரி தசா புக்தி, காலச்சக்கிர தசா என அனைத்து விதமான கணிதங்களையும் கொண்டது.
இது கிரக நிலைகளை ஆராய்ந்து, உங்கள் வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் உள்ள தாக்கங்களை விளக்குகிறது. எங்கள் சாப்ட்வேர் மேலும் உங்கள் குணநலன்கள், தொழில் வாழ்க்கை, காதல், திருமணம் மற்றும் பலவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்குகிறது. எங்கள் ஜோதிட சாப்ட்வேர் எளிமையான அம்சங்களைக் கொண்டுள்ளது, இதனால் அனைவரும் எளிதாகப் பயன்படுத்த முடியும்.
நல்ல காரியம், செயல் செய்ய
புது தொழில் தொடங்க
புது முயற்சி தொடங்க
நல்ல நேரம் தெரிய வேண்டுமா?
தொழில் ஸ்தானம் என்பது ஒருவரின் ஜாதக லக்னத்திலிருந்து 10-ம் இடத்தில் அமைகின்றது. 1, 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள். இவற்றில் 10 என்பது உயர் கேந்திரமாகும். 10-ம் இடமும், 10-ம் வீடும் வலுப் பெற்றிருக்கும் அன்பர்கள் சொந்தத்தொழிலில் வெற்றி பெறமுடியும்.
அதேபோல் கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில் அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11–ம் இடங்களில் குரு உலவும் போது தொழில் தொடங்குவது நல்லது. தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும்.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் அமிர்த யோகம் உள்ள நாளில் தொழில் தொடங்கினால் மிகவும் சிறப்பாக அமையும். அதேபோல் சித்தயோகம், மரணயோகம், பிரபாலாரிஷ்டயோகம் ஆகியவற்றில் தொழில் தொடங்குவதை நிச்சயம் தவிர்த்து கொள்ள வேண்டும்.